பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்.
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு, மயா, த்வஸ்ட்டா, சிற்பி, விஸ்வஞ்ஞா
என்னும் விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து
விஸ்வகர்மாவென்னும் நாமம் பெற்று
தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும்
சகலகலை குருவென்று சாற்றினார் காண்