தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு வணக்கம் !

நமது இணைய தளத்தின் நோக்கம், உலகில் எங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் விஸ்வகர்மா சமுதாய மக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களது வளர்ச்சிக்கு வழிகாட்ட விழைவதே. தமிழ் விஸ்வகர்மா மக்களின் பின் வரும் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி செய்வதே எமது தலையாய நோக்கமாகும்.

1. வாழ்க்கைத் துணையைத் தேடும் நம் சமூகத்தினரின் தகவல்களை சேகரித்து, அதன் மூலம் அவர்களுக்கு உதவுதல்.

2. தங்களது தொழிலை மேலும் முன்னேற்ற விழையும் அன்பர்களுக்கு, அதற்குரிய தகவல்களை அளித்தல்.

3. வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களைப் பற்றிய தகவல்களை நம் சமுதாயத்தில் சொந்தமாக தொழில் மற்றும் வியாபாரம் நடத்தி வருபவர்களுக்கு அளித்து, வேலை வாய்ப்பை உண்டாக்கி தருதல்.

4. நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான கருத்துக்களை முன்மொழியும் அன்பர்கள் நடத்தும் கலந்தாய்வுக் கூட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவித்தல்.

5. சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களின் ஆலோசனைகள், படைப்புகளை வெளியிடுதல்.

6. கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவித்தல்.

7. சாதனையாளர்களை கௌரவித்தல்.

நம் சமூகத்திற்கு பயனுள்ள தகவல்களை எங்களுக்கு அளித்தும், சமுக அக்கறையுடன் இங்கு வெளியிடப்படும் தகவல்களை தாங்கள் பயன்படுத்துமாறும் , நம் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.